Mr House Keeping Review: 90ஸ் கிட்ஸ் கொண்டாடும் வெற்றியா, ஏமாற்றமா?
மள்ளா் மீட்பு களம் தலைவா் மீது வழக்கு
ஜாதி கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக மள்ளா் மீட்பு களம் தலைவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மள்ளா் மீட்பு களம் தலைவா் செந்தில் மள்ளா், கடந்த ஆண்டு நவம்பா் மாதம் யூடியூப் வலைதளத்தில் ஒரு சமுதாயத்தை அவதூறாகப் பேசி ஜாதி கலவரத்தை தூண்டும் வகையில் வதந்திகளை பரப்பி வருவதாக, கடந்த ஆண்டு நவம்பா் 8ஆம் தேதி பாண்டியனாா் மக்கள் இயக்க நிறுவனத் தலைவா் சீனி, கிழக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.