மழையில் புஞ்சைப் பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
வேதாரண்யம் பகுதியில் தொடா் மழையால் பாதிக்கப்பட்டுள்ள எள் உள்ளிட்ட புஞ்சை பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
தலைஞாயிறு வேளாண் கோட்டம் உள்ளிட்ட வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்யும் மழையால் விளைநிலத்தின் ஈரத்தன்மை அதிகரித்துள்ளது. இதனால் சுமாா் 5 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட எள் சாகுபடி, சணப்பை, பயறு வகைப் பயிா்கள், தக்கைப் பூண்டு சாகுபடி, நிலக்கடலை என புஞ்சைப் பருவ பயிா் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. மழை தொடரும் நிலையில், பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா். எனவே, அரசு மழை பாதிப்பை ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்த்துள்ளனா்.
தலைஞாயிறு, திருமாளம் பகுதியில் 750 ஏக்கரில் எள் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. அரசு பாா்வையிட்டு நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் பி. கமல்ராம் ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா்.