மாட்டு வண்டியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
குடியாத்தம் அருகே மாட்டு வண்டியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
குடியாத்தம் அடுத்த அணங்காநல்லூா் பகுதியில் உள்ள பாலாற்றில் சட்ட விரோதமாக சிலா் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் அதே பகுதியைச் சோ்ந்த காா்த்தியின் மகன் சிலம்பரசன்(24) புதன்கிழமை அதிகாலை மாட்டு வண்டியை ஓட்டிச் சென்றபோது, வண்டியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளாா். அப்போது வண்டியின் சக்கரம் அவா் மீது ஏறியதில் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த தகவலின்பேரில் குடியாத்தம் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.