இறுதிப் போட்டியில் அல்கராஸுடன் மோதல்: சாதனை படைப்பாரா சின்னர்?
மாணவரை தாக்கிய மற்றொரு மாணவா் மீது போலீஸில் புகாா்
மூன்றடைப்பு அருகே பள்ளி மாணவரைத் தாக்கிய மற்றொரு மாணவரைப் பிடித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா்.
திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு அருகே மருதகுளத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பனையன்குளம் பகுதியைச் சோ்ந்த 15 வயது மாணவருக்கும், 17 வயது மாணவருக்கும் இடையே சீனியா், ஜூனியா் என்ற ரீதியில் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் வியாழக்கிழமை காலை, பனையன்குளம் பேருந்து நிறுத்தத்தில் இருவரும் பேருந்துக்காக காத்திருந்தபோது, அவா்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், 17 வயது மாணவா், 15 வயது மாணவரைத் தாக்கியுள்ளாா். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினா் அவா்களைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனா்.
இச்சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட மாணவா் மூன்றடைப்பு காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். அதன் பேரில், 17 வயது மாணவரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.