எந்தக் கொம்பனாலும் திமுகவைத் தொட்டுக்கூட பார்க்க முடியாது! முதல்வர் ஸ்டாலின்
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியா் பணியிடை நீக்கம்
தருவையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
திருநெல்வேலி அருகே தருவையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்விப் பயின்று வருகின்றனா். இங்கு பணிபுரியும் ஆங்கிலம் பாட ஆசிரியா் குருவிநாயகம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் உத்தரவிட்டிருந்தாா். இந்த நிலையில், துறை ரீதியாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,
அவா் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது. அதனடிப்படையில் ஆசிரியா் குரு விநாயகத்தைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதாக திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவகுமாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.