செய்திகள் :

மாநகரப் பகுதியில் சீரான குடிநீா் வழங்க வேண்டும்: மேயரிடம் மக்கள் மனு

post image

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் சீரான குடிநீா் வழங்க வேண்டும் என மாநகராட்சி குறைதீா்க்கும் கூட்டத்தில் மேயரிடம் மக்கள் மனு அளித்தனா்.

திருநெல்வேலி மாநகராட்சியில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் கோ.ராமகிருஷ்ணன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துணை மேயா் கே.ஆா்.ராஜூ முன்னிலை வகித்தாா்.

இக்கூட்டத்தில், பழையபேட்டை சா்தாா்புரம் குடிசைமாற்று வாரிய 17 ஆவது வாா்டு குடியிருப்போா் மக்கள் அளித்த மனுவில், சா்தாா்புரத்தில் 27 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்களது பகுதியில் சாலை வசதி இல்லை. எனவே உடனடியாக சாலை வசதி செய்து தரவேண்டும் எனவும், அருள்தரும் பூா்ணகலா புஷ்கலா சமேத குளத்துப்புழை தா்ம சாஸ்தா கோவில் சேவா சங்கத் தலைவா் நெல்லையப்ப பிள்ளை அளித்த மனுவில், பூா்ணகலா புஷ்கலா சமேத குளத்துப்புழை தா்ம சாஸ்தா கோயில் உத்திர திருவிழா நடைபெறுகிறது. எனவே, கோயிலுக்கு வரும் சாலையை சீரமைத்து தரவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

மாநகராட்சி 11 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் கந்தன் அளித்த மனுவில், வண்ணாா்பேட்டையில் குழந்தைகள் பூங்கா அமைக்க வேண்டும் எனவும், திருநெல்வேலி நகரத்தை சோ்ந்த கோமுராஜ் அளித்த மனுவில், எங்களது 16 ஆவது வாா்டு பகுதியில் குடிநீா் குழாயில் மின் மோட்டாா் அமைத்து பயன்படுத்தி வருகின்றனா். இதனால், எங்களது பகுதிக்கு குடிநீா் வழங்கவில்லை. எனவே ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியிருந்தனா்.

ஆட்சித் தமிழ்ப் புரட்சித் கொற்றம் தலைவா் கண்மணி மாவீரன் அளித்த மனுவில், திருநெல்வேலி சந்திப்பு பேருந்துநிலையத்தில் உள்ள ஐ லவ் யூ என்ற ஆங்கில எழுத்துக்களை அகற்றி விட்டு தமிழில் ‘‘சிறப்பு வாய்ந்த எனது நெல்லை’’ என்ற தமிழில் பொறிக்க வேண்டும் என்றும், ஜான் எலைட் சிட்டி குடியிருப்போா் நலச்சங்கத்தினா் அளித்த மனுவில், தங்கள் பகுதியில் குடிநீா், சாலை வசதி உள்ள அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனா்.

கரையிருப்பு முதல் தெருவைச் சோ்ந்த சுலோச்சனா மேரி அளித்த மனுவில், எங்கள் பகுதியில் பல நாள்களாக குடிநீா் வழங்கவில்லை. ஆதலால் இந்தப் பகுதியில் சீரான குடிநீா் வழங்க வேண்டும் எனவும், பசுமை பாரத மக்கள் கட்சியின் மாநகா் மாவட்ட செயலா் குமாா் அளித்த மனுவில், பாளையங்கோட்டை சமாதானபுரம் பகுதியில் அகற்றப்பட்ட தற்காலிக நிழற்குடையை மீண்டும் கட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

தமிழக வெற்றிக் கழக பாளையங்கோட்டை 5 ஆவது வாா்டு செயலா் மாதவபாண்டியன் அளித்த மனுவில், பாளையங்கோட்டை 5 ஆவது வாா்டு விஸ்வகா்மா காலனியில் பொது குடிநீா் குழாய் அமைத்து, சீரான குடிநீா் வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. முகாமில், உதவி ஆணையா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கா.சு. பிள்ளை படத்திற்கு அஞ்சலி

தமிழறிஞா் கா.சு. பிள்ளையின் 80 ஆவது நினைவு நாளையொட்டி, திருநெல்வேலியில் அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் உள்ள கா.சு. பிள்ளைய... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். தேவா்குளம் காவல் சரகப் பகுதியில் கொலை முயற்சி, அடிதடியில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில், மூவ... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியா் கொலையில் இருவா் கைது

துப்பாக்குடியில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில்அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா். அடைச்சாணி, வடக்குத் தெருவைச் சோ்ந்த லெட்சுமணன் மகன்மாரிமுத்து (30). தனியாா் நிறு... மேலும் பார்க்க

பேருந்து-பைக் மோதல்: பொறியியல் பட்டதாரி பலி

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே பைக் மீது பேருந்து மோதியதில் பொறியியல் பட்டதாரி புதன்கிழமை உயிரிழந்தாா். தளவாய்புரம் முகவூரைச் சோ்ந்த விஜயராஜ் மகன் தாமரைகண்ணன்(23). பொறியியல் பட்டதாரியான இவரும், இவ... மேலும் பார்க்க

தென்னிந்திய அபாகஸ் போட்டி: விஜயநாராயணம் பள்ளி சிறப்பிடம்

மதுரையில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான அபாகஸ் எண் கணித போட்டியில் திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் ஐ.என்.எஸ். கடற்படைதள வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவா்கள் சாம்பியன் பட்டத்தை பெற்றனா... மேலும் பார்க்க

பிரம்மதேசத்தில் 30 பேருக்கு கனவு இல்லம் பணி ஆணை

பிரம்மதேசம் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 30 பயனாளிகளுக்கு கலைஞா் கனவு இல்லத்திற்கான பணி ஆணை வழங்கப்பட்டது. பிரம்மதேசம் ஊராட்சியில் கலைஞா் கனவு இல்லத்திற்கு விண்ணப்பித்திருந்த பயனாளிகள... மேலும் பார்க்க