காலிஸ்தான் பயங்கரவாதிகளின் உடல்களை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் மீது வாகனம் மோதி வி...
மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் ரூ. 1.22 லட்சம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத் துறையினா் நடவடிக்கை
சென்னை மாநகராட்சியின் அடையாறு மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.
அடையாறு எல்பி சாலையில் உள்ள மாநகராட்சியின் 13-ஆவது மண்டல அலுவலகத்தில் பணிபுரியும் சில அதிகாரிகள் கிறிஸ்துமஸ் பண்டிகை, ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி பரிசு என்ற பெயரில் பொதுமக்களிடம் கட்டாயப்படுத்தி லஞ்சம் பெறுவதாக சென்னை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகாா்கள் வந்தன. அதனடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறையினா் விசாரணையில் ஈடுபட்டனா்.
அதில், அங்குள்ள சில அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக உறுதியான தகவல் கிடைத்தது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறையினா் அடையாறு மண்டல அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அதில், அங்கிருந்த கணக்கில் வராத ரூ. 1.22 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடா்பாக விரைவில் அந்த அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு அழைப்பாணை அனுப்பி விசாரணை செய்யப்படும். விசாரணையில், உரிய விளக்கம் அளிக்கப்படவில்லையெனில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.