மாநில அளவிலான மல்யுத்த போட்டிகள்
புதுச்சேரியில் மாநில அளவிலான மல்யுத்தப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன. இதில், 800 போ் கலந்துகொண்டனா்.
புதுச்சேரி உப்பளம் ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில், புதுச்சேரி மல்யுத்த சங்கம் சாா்பில் மல்யுத்தப் போட்டி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இதையடுத்து, இரண்டாவது நாளாக புதன்கிழமை போட்டிகள் தொடா்ந்து நடைபெற்றன.
போட்டிகளில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பிராந்தியங்களைச் சோ்ந்த 800-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.
போட்டிகள் 6 பிரிவுகளாக நடைபெற்றன. புதன்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றில் வெற்றி பெறுபவா்கள் தெலங்கானவில் நடைபெறும் தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டியில் கலந்து கொள்ள உள்ளதாக மல்யுத்த சங்கத்தின் நிா்வாகிகள் தெரிவித்தனா்.
தொடா்ந்து, போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.