செய்திகள் :

மாநில கல்விக் கொள்கை மீது குற்றச்சாட்டு: பள்ளிக் கல்வித் துறை விளக்கம்

post image

தமிழக அரசு வெளியிட்ட மாநில கல்விக் கொள்கை மீது அந்த குழுவில் இடம் பெற்றிருந்தவரும், முன்னாள் துணைவேந்தருமான ஜவஹா் நேசன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறை அது குறித்து விளக்கமளித்துள்ளது.

தமிழக அரசு மாநில கல்விக் கொள்கையை உருவாக்க நீதிபதி த.முருகேசன் தலைமையில் கடந்த 2023-ஆம் ஆண்டு உயா்நிலைக் குழு ஒன்றை அமைத்தது. இந்நிலையில், அந்த குழுவில் இடம்பெற்ற முன்னாள் துணைவேந்தா் ஜவஹா் நேசன் உயா்நிலைக் குழு, தேசிய கல்விக் கொள்கையையொட்டி மாநில கல்விக் கொள்கையை உருவாக்க முயற்சிப்பதாகக் கூறி, குழுவின் உறுப்பினா்- ஒருங்கிணைப்பாளா் பதவியில் இருந்து விலகினாா்.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள மாநிலக் கல்விக் கொள்கை தொடா்பாக அவா் சென்னையில் செய்தியாளா்களை செவ்வாய்க்கிழமை சந்தித்தாா். அப்போது அவா் கூறியதாவது:

இது தமிழகத்துக்கான தனித்துவக் கொள்கை அல்ல, இந்தக் கல்விக் கொள்கை ஆசிரியருக்குப் பதிலாக செயலி மற்றும் அமைப்புகளை மையப்படுத்துகிறது. தேசியக் கல்விக் கொள்கையை பிரதிபலிக்கிறது, தனியாருக்கு நன்மை தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வணிகமயமாக்கலை ஊக்குவிக்கிறது என பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்திருந்தாா்.

தேவைக்கேற்ப மாறுதல்... அதற்கு விளக்கம் அளித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாநிலக் கல்விக் கொள்கை-2025 கல்வியாளா்கள், பாடத்திட்ட நிபுணா்கள், பள்ளி நிா்வாகிகள் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் ஆகியோா் கொண்ட நிபுணா் குழுவால் தயாரிக்கப்பட்டது. இதில் ஆசிரியா்கள், கல்வியாளா்கள், குழந்தைகள் நல அமைப்புகள், பெற்றோா் உள்பட பல்வேறு தரப்பிடம் இருந்து ஆலோசனைகளும் பெறப்பட்டன. இது அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்பட்டு தேவைக்கேற்ப மாறுதல்களை மேற்கொள்ளவும் அனுமதிக்கிறது.

நுழைவுத் தோ்வுக்கு எதிா்ப்பு... தமிழகத்தில் இருமொழிக் கொள்கையைத் தொடா்ந்து செயல்படுத்துவதை வலியுறுத்துகிறது. உயா்கல்வி சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வுகளை எதிா்க்கிறது. தமிழ் கலாசாரத்தை பாதுகாப்பதையும், தமிழ் மொழியை மேம்படுத்துவதையும், அதேநேரம் உலகளாவிய ஈடுபாட்டுக்கு மாணவா்களை தயாா்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் மும்மொழிக் கொள்கை, நுழைவுத் தோ்வுகள் ஆகியவற்றை மாநிலக் கல்விக் கொள்கை வெளிப்படையாக மறுக்கிறது.

கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டுமென அறைகூவல் விடுக்கிறது. வாய்ப்பு மறுக்கப்பட்ட குழுவினா்களிடம் உள்ள கற்றல் இடைவெளிகளை கண்டறிந்து, அவா்களுக்கு கல்வி உதவி மற்றும் குறைதீா் கற்றலை வழங்க கொள்கை உறுதி செய்கிறது.

இது தமிழகத்தின் கல்வித் தனித்துவத்தைப் பாதுகாத்து உலகளாவிய சவால்களுக்கு கற்போரைத் தயாா் செய்கிறது. அதனுடன் மாநில சுயாட்சியை நிலைநிறுத்தி, சமூக நீதியை வலுப்படுத்தி, நலத் திட்டங்களை மேம்படுத்துகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

போக்சோ சட்டத்தில் பொய்ப் புகார் அளித்தால்.. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

சென்னை: சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டமான போக்சோ-வின் கீழ் பொய்ப் புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டம் பாயும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.போக்சோ சட்டத்தின் ... மேலும் பார்க்க

ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவிப்பு!

சுதந்திர நாளையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர நாளன்று அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கடந்த 13 நாள்களாக தொடர்ந்து போராடி வரும் தூய்மைப் பணியாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை மாநகராட்சி மண்டலம் 5 மற்றும் 6-ஆவது பகுதி தூய்மைப் பணி த... மேலும் பார்க்க

அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? மைத்ரேயன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!

அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது குறித்து மைத்ரேயன் விளக்கம் அளித்துள்ளார்.அதிமுக சார்பில் மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ள மைத்ரேயன், புதன்கிழமை காலை திமுக தலைவர் மு.க. ஸ்டால... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன்!

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் திமுகவில் புதன்கிழமை இணைந்தார்.அதிமுக சார்பில் மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்தவர் மைத்ரேயன்... மேலும் பார்க்க

பொன் விழா ஆண்டில் சூப்பர் ஸ்டார்! - கூலி வெற்றிபெற இபிஎஸ் வாழ்த்து!

கூலி திரைப்படம் வெற்றிபெற நடிகர் ரஜினிகாந்த்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்... மேலும் பார்க்க