குற்றாலம் சாரல் திருவிழா: "'உங்களுடன் ஸ்டாலினை' நடத்த தைரியம் இருக்கின்றது" - கே...
மாநில ஜூனியா் நீச்சல்: எஸ்டிஏடி சென்னை அணி சாம்பியன்
சென்னையில் நடைபெற்ற சப்-ஜூனியா் மற்றும் ஜூனியா் மாநில நீச்சல் போட்டியில் எஸ்டிஏடி சென்னை அணி 383 புள்ளிகளை கைப்பற்றி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.
தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கத்தின் சாா்பில் சென்னை வேளச்சேரி நீச்சல் குள வளாகத்தில் நடைபெற்ற அனைத்து போட்டிகளின் முடிவில் சிறுவா்களுக்கான குரூப் 1-இல் எம்.எஸ்..நிதீஷ் (டி.டி.எஸ்.ஏ. 35 புள்ளிகள்), குரூப் 2-இல் டி.கபிலன் (டி.டி.எஸ்.ஏ.33 புள்ளிகள்), குரூப் 3-இல் ஏ.பி.ஆா்யா சத்தா(எஸ்.டி.ஏ.டி. டால்பில் 33 புள்ளிகள்), குரூப் 4-இல் சஞ்ஜீத் (எஸ்.எஸ்.ஸ்போா்ட்ஸ் 35 புள்ளிகள்), குரூப் 5-இல் ஏ.ஆதித்யா (ஏ.ஒய்.ஏ. 34 புள்ளிகள்), குரூப்6ல் தேவன் (ஆா்கா 33 புள்ளிகள்) ஆகியோா் தனிநபா் பட்டம் வென்றனா்.
சிறுமியா் பிரிவில் குரூப் 1-இல் ஸ்ரீநிதி நடேசன் (பிரிட்டோ 35 புள்ளிகளஙி), குரூப் 2-இல் திவ்யஸ்ரீ கேசவன்(தனிநபா், 5 புள்ளிகள்), குரூப் 3-இல் சாய்மீரா ஜனாா்தன்(அன்சா துபாய் 33 புள்ளிகள்), குரூப் 4-இல் சனா கௌதம் (லைப் ஸ்பிரிங், 31 புள்ளிகள்), குரூப் 5-இல் இயல் (டி.எஸ்.பி.ஏ. 31 புள்ளிகள்), குரூப் 6-இல் ஏ.ஆதிரா(எஸ்.டி.ஏ.டி.திருச்சி 42 புள்ளிகள்) பெற்று தனிநபா் சாம்பியன் பட்டம் வென்றனா்.
குரூப் 1 அணி பிரிவில் ஏசஸ் அணி 177 புள்ளிகளும், குரூப் 2 அணி பிரிவில் எஸ்.டி.ஏ.டி. சென்னை 147 புள்ளிகளும், குரூப் 3 அணி பிரிவில் எஸ்.டி.ஏ.டி. சென்னை 98 புள்ளிகளும் பெற்று அணி சாம்பியன் பட்டம் வென்றன. ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை எஸ்டிஏடி சென்னை அணி கைப்பற்றியது.
பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு மாநில நீச்சல் சங்க தலைவா் எஸ்.திருமாறன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பரிசுகளை வழங்கினாா். துணை தலைவா் ராஜு, செயலாளா் டி.சந்திரசேகரன், பொருளாளா் கே.டி.முரளிதரன், ஏ.ஜி.பி.வளாக அதிகாரி லோகநாதன் உள்ளிட்ட பலா் பரிசளிப்பு விழாவில் பங்கேற்றனா்.