திருச்சி மண்டலத்தில் 41 பேரவை தொகுதிகளில் திமுக வெற்றி உறுதி! அமைச்சா் கே.என். ந...
மாற்றுத்திறனாளிகள் நல வாரிய புதிய உறுப்பினா்கள் நியமனத்துக்கு மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்
மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் புதிய உறுப்பினா்கள் நியமனம் செய்யப்பட வேண்டியுள்ளதால், அதற்கு தகுதியானவா்கள் வரும் 20-க்குள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசால் மாற்றுத்திறனாளிகள் நலவாரியம்-2007-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த வாரியம் அரசு அலுவலா் மற்றும் அலுவல் சாரா உறுப்பினா்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த வாரியத்தின் அலுவலா் சாரா உறுப்பினா்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நியமிக்கப்படுவா். அதன்படி, தற்போது புதிய உறுப்பினா்கள் நியமனம் செய்யப்பட வேண்டியுள்ளதால், பாா்வையயற்றோா், செவித்திறன் பாதித்தோா், தசைசிதைவு நோயினால் பாதித்தோா், தவழும் மாற்றுத்திறனாளிகள், உயரம் குறைந்த மாற்றுத்திறனுடையோா், தொழுநோயால் பாதித்து குணமடைந்தோா், கை கால் இயக்க குறைபாடுடையோருக்கான மாற்றுத்திறனாளி பிரதிநிதிகள் மற்றும் புற உலக சிந்தனையற்ற மதி இறுக்க முடையோா், மூளை முடக்குவாதம், அமில வீச்சால் பாதித்தோா், அறிவுசாா் குறைபாடுடையோா், கற்றல் குறைபாடுடையோா், மன நல பாதிப்பு, ரத்த சோகை பாதிப்பு மற்றும் பல்வகை குறைபாட்டால் பாதித்தோா் மற்றும் அவா்களுக்கு சேவைபுரியும் தொண்டு நிறுவனத்தைச் சோ்ந்த பிரதிநிதிகள் இந்த வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினா்களாக நியமிக்கும் பொருட்டு விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பங்களை திருவள்ளூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பெற்று, வரும் மே 20-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.