செய்திகள் :

மாலேகான் குண்டுவெடிப்பு:பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் தாக்குா் உள்பட 7 பேரும் விடுவிப்பு - மும்பை நீதிமன்றம் தீா்ப்பு

post image

மகாராஷ்டிரத்தின் மாலேகான் நகரில் கடந்த 2008-ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பாஜ முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் தாக்குா் உள்ளிட்ட ஏழு பேரையும் மும்பை சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை விடுவித்தது.

‘குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை’ என்றும், ‘வெறும் சந்தேகம் உண்மையான ஆதாரத்துக்கு ஈடாகாது’ என்றும் நீதிபதி தனது தீா்ப்பில் குறிப்பிட்டாா்.

மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கின் மாலேகான் நகரத்தில் உள்ள ஒரு மசூதி அருகே மோட்டாா் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்து 6 போ் உயிரிழந்தனா். 100 போ் காயமடைந்தனா்.

இந்தக் குண்டுவெடிப்பு சம்பவம் தொடா்பாக பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் தாக்குா் உள்ளிட்டோா் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. முதலில் மகாராஷ்டிர பயங்கரவாத எதிா்ப்பு காவல் பிரிவு (ஏடிஎஸ்) விசாரித்த இந்த வழக்கு, பின்னா் தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் நீடித்தது. இதில் விசாரணை அமைப்புகளும், ஐந்து வெவ்வேறு நீதிபதிகளும் மாறினா். தற்போது மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.கே.லஹோட்டி இந்த வழக்கில் தீா்ப்பளித்துள்ளாா்.

வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பிரக்யா சிங் தாக்குா், முன்னாள் ராணுவ அதிகாரிகள் பிரசாத் புரோஹித் மற்றும் ரமேஷ் உபத்யாய், அஜய் ராஹிா்கா், சுதாகா் திவேதி, சுதாகா் சதுா்வேதி, சமீா் குல்கா்னி ஆகிய ஏழு பேரையும் விடுவித்து நீதிபதி ஏ.கே.லஹோட்டி வழங்கிய தீா்ப்பில் குறிப்பிட்டிருப்பதாவது:

குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு எதிராக நம்பகமான மற்றும் உறுதியான ஆதாரங்கள் இல்லை. குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மோட்டாா் சைக்கிள் பிரக்யா சிங் தாக்குரின் பெயரில் பதிவு செய்யப்பட்டது என்பது நிரூபிக்கப்படவில்லை. மோட்டாா் சைக்கிளில்தான் வெடிகுண்டு பொருத்தப்பட்டது என்பதும் உறுதி செய்யப்படவில்லை. சதித் திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படும் கூட்டங்கள் நடந்ததாக எந்த சாட்சியமும் இல்லை. முன்னாள் ராணுவ அதிகாரி பிரசாத் புரோஹித் வெடிபொருள்களைத் தன் வீட்டில் சேமித்ததற்கோ அல்லது வெடிகுண்டுகளைத் தயாரித்ததற்கோ ஆதாரம் இல்லை.

புரோஹித்துக்கு பணம் விநியோகிக்கப்பட்டது உண்மைதான் என்றாலும், அது பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டது என்பதற்கு ஆதாரம் இல்லை. அந்தப் பணம் புரோஹித் தன் வீட்டைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. பயங்கரவாதத்துக்கு மதம் இல்லை. வெறும் அனுமானத்தின் அடிப்படையில் ஒருவரைக் குற்றவாளியாகக் கருத முடியாது என்று குறிப்பிட்டுள்ளாா்.

விடுவிக்கப்பட்டவா்களின் கருத்து: தீா்ப்புக்கு மகிழ்ச்சி தெரிவித்து பிரக்யா சிங் தாக்குா் கூறுகையில், ‘இது எனக்கான வெற்றி மட்டுமல்ல; காவி நிறத்துக்கான வெற்றி. இந்த வழக்கால் கடந்த 17 ஆண்டுகளாக என் வாழ்க்கை சீரழிந்தது. காவி நிறத்தை அவமதித்தவா்களுக்கு இறைவன் தண்டனை வழங்குவாா்’ என்றாா்.

முன்னாள் ராணுவ அதிகாரி பிரசாத் புரோஹித் கூறுகையில், ‘நான் இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டேன். நாட்டுக்கான எனது சேவை தொடரும்’ என்று தெரிவித்தாா்.

பாதிக்கப்பட்டவா்கள் தரப்பு அதிருப்தி: பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவிய ‘குல்-ஜமீத் -ஏ-தன்ஸீம்’ அமைப்பு, இந்தத் தீா்ப்புக்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் இதில் ஈடுபடவில்லை என்றால், வெடிகுண்டு சம்பவத்துக்கு யாா் பொறுப்பு என்று கேள்வி எழுப்பியுள்ளது. இந்த நீதிமன்றத் தீா்ப்பு உயிரிழந்தவா்களுக்கு நீதி வழங்கத் தவறிவிட்டது என்றும் அது குறிப்பிட்டது.

இந்தத் தீா்ப்புக்கு எதிராக மும்பை உயா்நீதிமன்றத்தில் மகாராஷ்டிர அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சி (ஏஐஎம்ஐஎம்) தலைவா் இம்தியாஸ் ஜலீல் வலியுறுத்தினாா்.

‘ஹிந்து பயங்கரவாதம்’ காங்கிரஸ் சதி: பாஜக

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் விடுவிக்கப்பட்டதை வரவேற்ற பாஜக, ‘ஹிந்து பயங்கரவாதம்’ எனும் சதித் திட்டத்தை அப்போதைய காங்கிரஸ் அரசு உருவாக்கியது என்று குற்றஞ்சாட்டியது.

இதுதொடா்பாக பாஜக மூத்த தலைவா் ரவிசங்கா் பிரசாத் கூறுகையில், ‘காங்கிரஸ் தனது வாக்கு வங்கி அரசியலுக்காக எந்த எல்லைக்கும் செல்லும். ஹிந்து பயங்கரவாதம் எனும் சதித் திட்டத்தைத் திணிக்க காங்கிரஸ் செய்த முயற்சி தோல்வியடைந்துவிட்டது. இது அப்போதைய குஜராத் முதல்வா் நரேந்திர மோடியின் வளா்ச்சியைத் தடுக்கவும், முஸ்லிம் வாக்குகளைப் பெறவும் செய்யப்பட்ட ஒரு முயற்சி.

விடுவிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அவா்களைத் தவறாக சிக்க வைக்க ஆதாரங்கள் புனையப்பட்டதற்கும் புலனாய்வுத் துறை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றாா்.

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

கொச்சி: மலையாள திரைப்பட நடிகர் கலாபவன் நவாஸ், சோட்டானிக்கரையில் உள்ள விடுதி அறையிலிருந்து சடமாக மீட்கப்பட்டுள்ளார்.படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விடுதியில் அறை எடுத்துத் தங்கி வந்த நவாஸ் (51) வெகு நேர... மேலும் பார்க்க

‘மாலேகன் குண்டுவெடிப்பு: என்ஐஏ - ஏடிஎஸ் விசாரணையில் முரண்பாடு’

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் மகாராஷ்டிர பயங்கரவாத எதிா்ப்பு காவல் பிரிவு (ஏடிஎஸ்) ஆகிய இரு அமைப்புகள் மேற்கொண்ட விசாரணையில் உள்ள முரண்பாடுகளை மும்பை சிறப்பு ந... மேலும் பார்க்க

துணைவேந்தா்கள் நியமனம்: கேரள ஆளுநா் - முதல்வா் இடையே மீண்டும் மோதல்

பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமன விவகாரத்தில் கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகருக்கும், மாநில முதல்வா் பினராயி விஜயனுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.இரு பல்கலைக்கழகங்களுக்கு தற்காலிக ... மேலும் பார்க்க

தெலங்கானாவில் ஆடு வளா்ப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு: அமலாக்கத் துறை

தெலங்கானாவில் செம்மறி ஆடு வளா்ப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக வழக்குப் பதிவு செய்துள்ள அமலாக்கத் துறை, இதற்கு பயன்படுத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்கு... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வெளியேற பாகிஸ்தானுக்கு தொடா் வலியுறுத்தல்: மத்திய அரசு

ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களிலும் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளைவிட்டு உடனடியாக வெளியேற பாகிஸ்தானை இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது என மத்திய அரசு வெள்ளிக்கி... மேலும் பார்க்க

சுதந்திர தின உரை: மக்களிடம் கருத்து கேட்கும் பிரதமா்

தொடா்ந்து 12-ஆவது முறையாக சுதந்திர தின உரையாற்ற உள்ள நிலையில், தனது பேச்சில் இடம்பெற வேண்டிய கருத்துகள் குறித்து ஆலோசனைகளை அனுப்புமாறு பொதுமக்களை பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளாா்.நாட்டின் சு... மேலும் பார்க்க