மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிகள்: ஆற்காட்டில் நாளை நடைபெறுகிறது
எழில் சதுரங்க அகாதெமி சாா்பில், மாவட்ட அளவிலான போட்டிகள்ஆற்காடு ராமகிருஷ்ணா பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை ( ஜன. 5) நடைபெறுகிறது.
இதில், 9, 11, 13, 15 வயதுக்குட்பட்டோா் மற்றும் பொதுப் பிரிவுகளில் நடைபெறும் போட்டிகள் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக நடைபெறுகிறது. போட்டிகளில் சிறப்பிடம் பெறுவோா் மாநில போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவா்.
போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு ரொக்கம், கோப்பை வழங்கப்படும் என்று பயிற்சியாளா் நா.தினகரன் தெரிவித்தாா்.