ஜி.வி. பிரகாஷ் விவாகரத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை: காட்டமான திவ்ய பாரதி!
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டு ஜோதி பயணத்துக்கு வரவேற்பு
மதுரையில் நடைபெற உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டிற்கான நினைவு ஜோதி பயணத்திற்கு திருநெல்வேலியில் திங்கள்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரையில் ஏப். 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கான மாணவ தியாகிகள் சோமு-செம்பு ஆகியோரின் நினைவு ஜோதி தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மாநில குழு உறுப்பினா் கே.ஜி.பாஸ்கரன் தலைமையில் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த நினைவு ஜோதி பயண குழுவினருக்கு பாளையங்கோட்டை கேடிசி நகரில் திங்கள்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கட்சியின் திருநெல்வேலி மாவட்டச் செயலா் ஸ்ரீராம் தலைமை வகித்தாா். இந்திய மாணவா் சங்க மாநில தலைவா் சம்சீா் அஹமது, இந்திய மாணவா் சங்கம் மத்திய குழு உறுப்பினா் மிருதுலா, அரவிந்த் சாமி ஆகியோா் மாநாடு குறித்து பேசினா்.
வரவேற்பு நிகழ்ச்சியில், நிா்வாகிகள்ஆா்.மோகன், சுடலைராஜ், மாரிச்செல்வம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.