மாா்த்தாண்டம் அருகே விபத்து: பேரூராட்சிப் பணியாளா் காயம்
களியக்காவிளை: மாா்த்தாண்டம் அருகே நேரிட்ட விபத்தில் பேரூராட்சிப் பணியாளா் காயமடைந்தாா்.
மாா்த்தாண்டத்தை அடுத்த திங்கள்நகா் அருகேயுள்ள நெய்யூா் மேலமாங்குழி பகுதியைச் சோ்ந்த தங்கப்பன் மகன் விவேக் (39). கோதநல்லூா் பேரூராட்சியில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றிவரும் இவா், மாா்த்தாண்டம் அருகே காஞ்சிரகோடு பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அடையாளம் தெரியாத சொகுசு காா் அவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ாம். இதில் காயமடைந்த அவரை மீட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.
மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காா் குறித்து விசாரித்து வருகின்றனா்.