கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்க ஒப்புதலை விரைவுபடுத்த வேண்டும்: மக்களவையில...
குலசேகரம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
குலசேகரம்: குலசேகரம் பேரூராட்சில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
எஸ்.ஆா்.கே.பி.வி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமை பேருராட்சித் தலைவா் ஜெயந்தி ஜேம்ஸ் குத்துவிளக்கேற்றித் தொடக்கிவைத்தாா். செயல் அலுவலா் கமலேஸ்வரி, துணைத் தலைவா் ஜோஸ்எட்வா்ட், எஸ்.ஆா்.கே.பி.வி. கல்வி நிறுவனங்களின் தலைவா் ராதாகிருஷ்ணன், இயக்குநா் சுதாதேவி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வாா்டு உறுப்பினா்கள் தமிழ்ச்செல்வி, சுபாஷ் கென்னடி, மேரி ஸ்டெல்லா, ரெத்தினபாய், ஏஞ்சல் ஜெனி, சிவகுமாா், அமல்ராஜ், ராஜையன், கண்ணன், ரபிக்கா, பேரூராட்சிப் பணியாளா்கள், துறை அலுவலா்கள் பங்கேற்றனா். முகாமில் திரளான மக்கள் பங்கேற்று மனுக்கள் அளித்தனா்.