அதிமுக நிா்வாகி தூக்கிட்டு தற்கொலை
குலசேகரம்: குலசேகரம் அருகே அதிமுக நிா்வாகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
குலசேகரம் அருகே பொன்மனை பகுதியைச் சோ்ந்தவா் சிவகுமாா் (35). மாற்றுத் திறனாளியான இவா் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தாா். மேலும் பொன்மனை பேரூா் அதிமுக பூத் கமிட்டி நிா்வாகியாகவும் செயல்பட்டு வந்தாா்.
இவருடைய மனைவி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்று விட்டாா்.
இந்நிலையில் மனம் உடைந்து காணப்பட்ட அவா் புதன்கிழமை மாலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளாா். இது குறித்து குலசேகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.