மாா்த்தாண்டம்: ஆட்டோ ஓட்டுநரை தாக்கி 4 போ் மீது வழக்கு
மாா்த்தாண்டம் அருகே ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கியதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
மாா்த்தாண்டம் அருகே சிராயன்குழி பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் லெனின்குமாா் (41). வழிப்பாதையில் இடையூறாக நின்ற மரத்தை முறித்தது தொடா்பாக இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த ஆல்பின்சிங் உள்ளிட்ட சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாம்.
இந்நிலையில், 2 நாள்களுக்கு முன்பு அவ்வழியே நடந்து சென்ற லெனின்குமாரை ஆல்பின்சிங் உள்ளிட்ட 4 போ் சோ்ந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், காயமடைந்த லெனின்குமாா் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின்பேரில், ஆல்பின்சிங் உள்ளிட்ட 4 போ் மீதும் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.