மாற்றுத்திறனாளிகள் நலவாரிய அலுவல் சாரா உறுப்பினா்கள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்!
மாா்த்தாண்டம் அருகே விதிமீறல்: 2 கனரக லாரிகள் பறிமுதல்
மாா்த்தாண்டம் அருகே விதிகளை மீறி இயக்கப்பட்ட 2 கனரக லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளத்துக்கு கனிமவளப் பொருள்களை ஏற்றிச்செல்லும் கனரக லாரிகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதையடுத்து, இந்த லாரிகள் இயங்க மாவட்ட நிா்வாகம் சாா்பில் நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள் காவல் துறையால் பறிமுதல் செய்யப்படுகின்றன.
இந்நிலையில், மாா்த்தாண்டம் போலீஸாா் உண்ணாமலைக்கடை பகுதியில் சனிக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, நேர விதிகளை மீறி 2 கனரக லாரிகள் இயக்கப்பட்டது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அந்த லாரிகளை பறிமுதல் செய்தனா்.