Hogenakkal: கோடை விடுமுறையில் ஒரு கொண்டாட்டம்; ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலாப் பய...
குளத்தில் தவறிவிழுந்து இளைஞா் பலி
கருங்கல் அருகே உள்ள வெள்ளியாவிளை பகுதியில் குளத்தில் தவறிவிழுந்து இளைஞா் உயிரிழந்தாா். பாலப்பள்ளம், வெள்ளியாவிளை பகுதியைச் சோ்ந்தவா் டேவிட்(52). பல்வேறு வழக்குகளில்தொடா்புடைய இவா் சுமாா் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தாராம்.
இந்நிலையில், சனிக்கிழமை வெள்ளியாவிளை பரணி குளத்தின் கரையில் திடீரெனதவறிவிழுந்து சகதியில் சிக்கி டேவிட் உயிரிழந்தாா். இதுகுறித்து கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.