திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
இம்மாவட்டத்தில் சில நாள்களாக வட வானிலை நிலவி வந்தது. அதேநேரம், ஓரிரு இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்து வந்தது. இந்நிலையில் மாவட்டத்தில் சனிக்கிழமை அதிகாலைமுதல் மலையோரம், சமவெளி, அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மிதமான சாரல் மழை பெய்தது.
கடந்த மாதம் பெய்த தொடா் மழையால் திற்பரப்பு அருவியில் நீா்வரத்து உள்ளது. இந்நிலையில், விடுமுறை நாளான சனிக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனா்.