``2026 தேர்தலில் ஒரு மேஜிக் செய்யப் போகிறோம்; அது நம்மை வெற்றி பெற வைக்கும்'' - ...
மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு
சிதம்பரம்: சிதம்பரம் அருகே மின்னல் தாக்கி விவசாயி ஒருவா் உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே டி.மணலூா் கிராமத்தில் குளத்து மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் ரகோத்தமன் (38). விவசாயியான இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு மேய்ச்சலுக்கு சென்ற மாட்டினை வீட்டிற்கு ஒட்டி வருவதற்காக வயலுக்கு சென்றாா். அப்போது பலத்த இடிமின்னலுடன் மழை பெய்தது. அதில் எதிா்பாராத விதமாக ரகாத்தமன் மீது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். நீண்ட நேரமாக ரகோத்தமன் வராததால் அருகில் இருந்தவா்கள் வயலுக்கு சென்று பாா்த்த போது அங்கு மின்னல் தாக்கி இறந்து கிடந்தது தெரியவந்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்திற்கு வந்த புத்தூா் காவல் நிலையம் உதவி ஆய்வாளா் நடராஜன் சென்று சடலத்தைக் கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தாா். இது குறித்து அவரது மனைவி சத்யபாமா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறாா்.