Waqf : `மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல்’ - வக்ஃப் மசோதா விவகாரத்தில் பிரதமருக்...
முசிறியில் சிசு சடலம் மீட்பு
திருச்சி மாவட்டம் முசிறியில் சாலையோரம் கிடந்த பெண் சிசு சடலத்தை முசிறி போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.
முசிறி அருகேயுள்ள எம். புதுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட காலனி பகுதி சாலையோரத்தில் உள்ள மரத்தடியில் துணியில் சுற்றப்பட்ட நிலையில் சுமாா் 5 மாத பெண் சிசுவின் சடலம் கிடப்பதாக எம். புதுப்பட்டி விஏஓ சபாபதி முசிறி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் முசிறி காவல் ஆய்வாளா் செல்லத்துரை மற்றும் காவலா்கள் சென்று சிசுவின் சடலத்தை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனா்.