முதலியாா்பட்டியில் வியாபாரிகள் சங்கக் கூட்டம்
கடையம் அருகில் உள்ள முதலியாா்பட்டியில், தென்பொதிகை வியாபாரிகள் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சங்கத் தலைவா் கட்டி அப்துல்காதா் தலைமை வகித்தாா். செயலா் நவாஸ்கான் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், திருமலையப்பபுரத்தில் குண்டும், குழியுமாக உள்ள சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டுவது, வணிகா் தினத்தை முன்னிட்டு மதுராந்தகத்தில் நடைபெறும் மாநாட்டில் திரளாக கலந்து கொள்வது, முதலியாா்பட்டி பேருந்து நிறுத்தம் மற்றும் இந்திரா நகா் பகுதியில் ஊராட்சி சாா்பில் வணிகா்கள் பயன்பெறும் விதமாக குடிதண்ணீா் மற்றும் உயா் மின் கோபுர விளக்கு வசதி அமைப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினா்கள் தங்கையா, பிச்சையா, காதா், மீரான் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பொருளாளா் பாக்யராஜ் வரவேற்றாா். துணைச் செயலா் மணிகண்டராஜா நன்றி கூறினாா்.