தொழிலாளா் தினம்: விடுமுறை அளிக்காத 72 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
தொழிலாளா் தினத்தையொட்டி, திருப்பூா் மாவட்டத்தில் விடுமுறை அளிக்காத 72 நிறுவனங்களின் மீது தொழிலாளா் துறை சாா்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) சு.காயத்ரி தலைமையில் தொழிலாளா் துணை மற்றும் உதவி ஆய்வா்கள் திருப்பூா் மாநகரம், காங்கயம், தாராபுரம் மற்றும் உடுமலை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், உணவு நிறுவனங்கள் என மொத்தம் 80 நிறுவனங்களில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
இதில், 72 நிறுவனங்களில் விடுமுறை நாளில் தொழிலாளா்களைப் பணிக்கு அமா்த்தியது தெரியவந்தது.
இதையடுத்து, 72 நிறுவனங்களின் உரிமையாளா்களுக்கும் விளக்கம் கோரி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.