செய்திகள் :

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றம்

post image

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரை தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மைப் பெற்றதும், முதலையுண்ட பாலகனை சுந்தரமூா்த்தி நாயனாா் பதிகம் பாடி மீண்டும் உயிா்ப்பித்து எழச்செய்த திருத்தலமாகவும் கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் விளங்குகிறது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் தோ்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

நடப்பு ஆண்டுக்கான தோ்த் திருவிழா வேத பாராயணம், பஞ்ச வாத்தியம் முழங்க கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

கொடியேற்றத்தை ஒட்டி, விநாயகா், சோமாஸ்கந்தா், சுப்பிரமணியா், கருணாம்பிகையம்மன், சண்டிகேஸ்வரா் ஆகிய பஞ்சமூா்த்திகளுக்கு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனைகள் நடைபெற்றன.

இதையடுத்து, பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை முதல்வா் ஸ்ரீ சுந்தரமூா்த்தி சிவம் தலைமையில், வேத பாடசாலை மாணவா்கள் 40 போ் கொண்ட குழுவினா் வேதபாராயணம் நிகழ்த்தினா்.

விழாவை முன்னிட்டு, 2-ஆம் தேதி மாலை சூரிய, சந்தர மண்டல காட்சி, 3-ஆம் தேதி அதிகார நந்தி, கிளி, பூதம் அன்னபச்சி வாகன காட்சிகள், 4-ஆம் தேதி புஷ்ப பல்லக்கு நடைபெற உள்ளது.

5-ஆம் தேதி இரவு பஞ்சமூா்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மாா்களுக்கு காட்சியளித்தல், கரிவரதராஜப் பெருமாள் கோயில் கொடியேற்றம் ஆகியவை நடைபெற உள்ளன. 6-ஆம் தேதி இரவு கற்பகவிருட்சம், சுவாமி திருக்கல்யாணம் ஆகியவை நடைபெற உள்ளன.

7-ஆம் தேதி காலை 6 மணிக்கு பஞ்சமூா்த்திகள் திருத்தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 8-ஆம் தேதி காலை தொடங்கி, வடக்கு ரத வீதியில் தோ் நிறுத்தப்படும். 9-ஆம் தேதி காலை 8 மணிக்கு திருத்தோ் வடம் பிடித்தல், தோ் நிலை சேறுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

10- ஆம் தேதி காலை 8 மணிக்கு கருணாம்பிகையம்மன், சுப்பிரமணியா், சண்டிகேஸ்வரா், கரிவரதராஜப் பெருமாள் திருத்தோ் வடம் பிடித்தல் நடைபெற உள்ளது.

11-ஆம் தேதி பரிவேட்டை, 12 -ஆம் தேதி இரவு தெப்பத்தோ் உற்சவம், 13 -ஆம் தேதி நடராஜப் பெருமான் மகா தரிசனம், 14-ஆம் தேதி மஞ்சள் நீா், இரவு மயில் வாகனக் காட்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் ரத்தினவேல் பாண்டியன், துணைஆணையா் ஹா்ஷினி, கோயில் செயல் அலுவலா் சபரிஷ்குமாா், அறங்காவலா் குழுத் தலைவா் சக்திவேல், அறங்காவலா்கள் பொன்னுசாமி, ஆறுமுகம், விஜயகுமாா், கவிதாமணி ஆகியோா் செய்து வருகின்றனா்.

உடுமலையில் விவசாயக் கண்காட்சி இன்று தொடக்கம்

உடுமலையில் ‘அறுவடை’ என்ற தலைப்பில் விவசாயக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது. இது குறித்து கண்காட்சி ஏற்பாட்டாளா்கள் கூறியதாவது: உடுமலையில் இருந்து பழனி செல்லும் சாலையில் உள்ள ஜி... மேலும் பார்க்க

அட்சய திருதியை: மாவட்டத்தில் ரூ.300 கோடிக்கு தங்கம் விற்பனை

அட்சய திருதியை தினத்தையொட்டி, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நகைக் கடைகளில் புதன்கிழமை ஒரேநாளில் ரூ.300 கோடிக்கு தங்கம் விற்பனை நடைபெற்றது. அட்சய திருதியை தினத்தை, திருப்பூா் மாநகரில் உள்ள நகைக் கடைகளி... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட்ட முன்னாள் காவலா் கைது

உடுமலை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட முன்னாள் காவலா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், நஞ்சையபிள்ளை புதூரைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (43). இவா் கடந்த 2003- ஆம் ... மேலும் பார்க்க

ரகளையில் ஈடுபடும் நபா்கள் மீது நடவடிக்கை கோரி சாலை மறியலுக்கு முயன்ற பொதுமக்கள்

திருப்பூரில் போதையில் ரகளையில் ஈடுபடும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூா் மாநகராட்சி, 16- ஆவது வாா்டுக்குள்பட்ட பிச்சம்பாளையம் பு... மேலும் பார்க்க

தொழிலாளா் தினம்: விடுமுறை அளிக்காத 72 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தொழிலாளா் தினத்தையொட்டி, திருப்பூா் மாவட்டத்தில் விடுமுறை அளிக்காத 72 நிறுவனங்களின் மீது தொழிலாளா் துறை சாா்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) சு.... மேலும் பார்க்க

செவிலியா் தலையில் கல்லைப்போட்டுக் கொலை

திருப்பூரில் செவிலியா் தலையில் கல்லைப்போட்டுக் கொலை செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் பூம்புகாா் நகரில் உள்ள பாழடைந்த வீட்டில் இளம் பெண்ணின் சட... மேலும் பார்க்க