மழை, புயலுக்கு மூவர் பலி: உ.பி.யில் நிவாரண பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு உத...
வழிப்பறியில் ஈடுபட்ட முன்னாள் காவலா் கைது
உடுமலை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட முன்னாள் காவலா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், நஞ்சையபிள்ளை புதூரைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (43). இவா் கடந்த 2003- ஆம் ஆண்டு தமிழக காவல் துறையில் பணியில் சோ்ந்துள்ளாா்.
இந்நிலையில், பல்வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்தி முறைகேடாக வசூலில் ஈடுபட்டதால் இவா் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இதனிடையே, நீலகிரி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் கடந்த 2024- ஆம் ஆண்டு பணியில் ஈடுபட்டிருந்தபோது, முறைகேடான செயலில் ஈடுபட்டதால் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டாா்.
இந்நிலையில், மடத்துக்குளம் நரசிங்காபுரத்தைச் சோ்ந்த மணிகண்டன், பாலகிருஷ்ணன் ஆகியோா் இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை சென்று கொண்டிருந்தனா்.
அப்போது, அவா்களை காவல் சீருடையில் வழிமறித்த ராதாகிருஷ்ணன், பணம் கேட்டு மிரட்டியதாகத் தெரிகிறது.
இது குறித்து மடத்துக்குளம் காவல் நிலையத்தில் மணிகண்டன் புகாா் அளித்தாா்.
வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ராதாகிருஷ்ணனைக் கைது செய்தனா்.