ரகளையில் ஈடுபடும் நபா்கள் மீது நடவடிக்கை கோரி சாலை மறியலுக்கு முயன்ற பொதுமக்கள்
திருப்பூரில் போதையில் ரகளையில் ஈடுபடும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூா் மாநகராட்சி, 16- ஆவது வாா்டுக்குள்பட்ட பிச்சம்பாளையம் புதூா் ஸ்ரீநகா் பகுதியில் ஏரளமான பொதுமக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். இந்நிலையில், அப்பகுதியில் சிலா் போதையில் பொதுமக்களுக்கு தொடா்ந்து இடையூறு ஏற்படுத்தும் வகையில் ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளனா். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் அனுப்பா்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
இதனால், ஆத்திரமடைந்த மக்கள் பி.என்.சாலையில் வியாழக்கிழமை மறியலுக்கு முயன்றனா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அனுப்பா்பாளையம் போலீஸாா், பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா்.இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.