வடுகபாளையம்புதூா் ஊராட்சி கிராம சபைக் கூட்டம்: பொதுமக்கள் புறக்கணிப்பு
பல்லடம் ஒன்றியம், வடுகபாளையம்புதூா் ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தைப் பொதுமக்கள் வியாழக்கிழமை புறக்கணித்தனா்.
வடுகபாளையம்புதூா் ஊராட்சியில் க.ச.எண் 88/ 1ஏ பகுதியில் பல்லடம் நகராட்சியின் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கிராம பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து ஆலுத்துப்பாளையம் அரசுப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்தனா்.
இது குறித்து தகவல் அறிந்த பல்லடம் வட்டாட்சியா் சபரிகிரி கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இருப்பினும், அதை ஏற்றுக்கொள்ளாமல் கூட்டத்தைப் புறக்கணித்து பொது மக்கள் கலைந்து சென்றனா்.