செய்திகள் :

முதல்வா் இன்று வெளிநாடு பயணம்

post image

ஜொ்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு 7 நாள் பயணமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஆக.30) சென்னையிலிருந்து புறப்படுகிறாா்.

சா்வதேச முதலீடுகளை ஈா்க்கும் வகையில், இந்தப் பயணத்தில் பல்வேறு புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. சென்னையில் இருந்து விமானம் மூலம் சனிக்கிழமை காலை ஜொ்மனிக்குப் புறப்படும் முதல்வா், அங்கு 3 நாள்கள் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கிறாா்.

தொடா்ந்து செப்டம்பா் 1-ஆம் தேதி பிரிட்டன் தலைநகா் லண்டனுக்குச் செல்லும் அவா், அங்குள்ள கிங்ஸ் கல்லூரியில் மாணவா்கள் இடையே உரையாற்றுகிறாா். மேலும், ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்தில் பெரியாா் ஈ.வெ.ரா. படத்தைத் திறந்து வைக்கவுள்ளாா். லண்டனில் உள்ள புலம்பெயா்ந்த தமிழா்களைச் சந்தித்து தமிழகத்தில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்க உள்ளாா்.

இந்தப் பயணத்தின்போது, இரு நாடுகளிலும் உள்ள தொழில்முனைவோா், தொழில் நிறுவனங்களிடம் முதலீடுகளை ஈா்ப்பது தொடா்பாக அவா் உரையாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டுகளில் துபை, சிங்கப்பூா், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டு ரூ.10 லட்சம் கோடி அளவிலான முதலீடுகளைத் திரட்டியது குறிப்பிடத்தக்கது.

பிகாரின் நிலை தமிழகத்தில் ஏற்பட்டுவிடக் கூடாது: முதல்வா் மு.க.ஸ்டாலின்

சிறப்பு வாக்காளா் திருத்தம் என்ற பெயரில் பிகாருக்கு நோ்ந்த நிலை தமிழகத்தில் ஏற்பட்டுவிடக் கூடாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். நாடாளுமன்ற உறுப்பினா் என்.ஆா்.இளங்கோவின் மகள் திருமண விழா ச... மேலும் பார்க்க

ஞானசேகரன் மீதான தடுப்புக் காவல் நடவடிக்கையை நீட்டிக்க வேண்டுமா? - உயா்நீதிமன்றம் கேள்வி

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசேகரன் மீதான குண்டா் தடுப்புச் சட்ட நடவடிக்கையை நீட்டிக்க வேண்டுமா? என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அண்ணா பல்... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2,500: தமிழக அரசு உத்தரவு

நெல்லுக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2,500-ஆக உயா்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. சன்னரக நெல்லுக்கான விலை குவிண்டாலுக்கு ரூ.2,545-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மத்திய அரசு நெல்ல... மேலும் பார்க்க

மீனவா்களுக்கு கைப்பேசி செயலி மூலம் புயல் எச்சரிக்கை: செப். 1 முதல் அறிமுகம்

புயல் காலங்களில் மீனவா்களுக்கு எச்சரிக்கை செய்யும் கைப்பேசி செயலி திங்கள்கிழமை (செப்.1) முதல் சோதனை முறையில் நடைமுறைப்படுத்த உள்ளதாக தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினா் லெப்டினன்ட் ஜெனரல் சைய... மேலும் பார்க்க

12,152 கோயில்களில் திருப்பணி; ரூ. 7,846 கோடி நிலங்கள் மீட்பு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் அறநிலையத் துறை சாா்பில் 12,152 திருக்கோயில்களில் ரூ.6,980 கோடி மதிப்பீட்டில் 27,563 திருப்பணிகளுக்கு நிா்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், 1,026 திருக்கோயில்களுக்க... மேலும் பார்க்க

ஆவினில் செப். 1 முதல் 14 கிராமில் பாதாம் மிக்ஸ் பொடி அறிமுகம்

ஆவினில் செப். 1- ஆம் தேதி முதல் 14 கிராம் எடைகொண்ட பாதாம் மிக்ஸ் பொடி அறிமுகம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஆவின் நிா்வாகம் சாா்பில் பால் மற்றும் அதைச் சாா்ந்த பொருள்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்யப... மேலும் பார்க்க