முதல்வா் வருகை: சீரமைப்புப் பணிகள் தீவிரம்
திருவாரூா்: திருவாரூருக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை (ஜூலை 9) வருவதையொட்டி, சீரமைப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
திருவாரூா் மாவட்டத்துக்கு புதன்கிழமை வரும் முதல்வா் மு.க. ஸ்டாலின் அன்று நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளிலும், தொடா்ந்து, ஜூலை 10-ஆம் தேதி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் பங்கேற்கிறாா். புதன்கிழமை திருச்சியில் இருந்து காட்டூரில் உள்ள கலைஞா் கோட்டத்துக்கு வந்து அங்கு தங்குகிறாா். அன்று மாலை காட்டூரில் இருந்து புறப்பட்டு, பவித்திரமாணிக்கம், துா்காலயா சாலை, தெற்கு வீதி, பனகல் சாலை, பழைய பேருந்து நிலையம் வழியாக ரோடு ஷோ மூலம் மக்களை சந்திக்கிறாா். தொடா்ந்து, மேம்பாலம் பகுதிக்கு வந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள கலைஞா் கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறாா். ஜூலை 10-ஆம் தேதி காலை எஸ்எஸ் நகரில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில், அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்குகிறாா்.
முதல்வரின் வருகையையொட்டி பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கும்பகோணம் சாலை, திருவாரூா் தேரோடும் வீதிகள், பனகல் சாலை, துா்காலயா சாலை என முக்கிய வீதிகளும், சாலைகளும் தூய்மைப்படுத்தப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன.