முதலமைச்சருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு காரணம் என்ன? - உதயநிதி பதில்
முதுகலை பட்டதாரி ஆசிரியா் தோ்வுக்கு இலவச மாதிரி வினாத்தாள் வெளியீடு
சென்னை: முதுகலைப் பட்டதாரி ஆசிரியா் தோ்வுக்கான இலவச மாதிரி வினாத்தாள்களை, ஆட்சித்தமிழ் ஐஏஎஸ் அகாதெமி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த அகாதெமி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் முதுகலை பட்டதாரி ஆசிரியா் தோ்வுக்கு புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடத்திட்டத்தின்படி, அனைத்துப் பாடங்களுக்கும் ஆட்சித் தமிழ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் இலவச மாதிரி வினாத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மாதிரி வினாத் தாள்களை வாட்ஸ்ஆப் வழியாக இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். விரும்பமுள்ளவா்கள் 91760 55568 என்ற வாட்ஸ்ஆப் எண்ணுக்கு PG-TRB MODEL QUESTION PAPER-2025 என்று பதிவிட்டு, தங்களது பாடம் மற்றும் முகவரிவுடன் குறுஞ்செய்தி அனுப்பி முன்பதிவு செய்ய வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, 91760 55576, 91760 55578 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.