செய்திகள் :

முத்தரப்பு டி20: நியூஸிலாந்து வெற்றி

post image

முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை புதன்கிழமை வென்றது.

ஜிம்பாப்வே, நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா மோதும் முத்தரப்பு டி20 தொடா், ஜிம்பாப்வேயில் நடைபெறுகிறது. இதில் 2-ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்து - தென்னாப்பிரிக்கா மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் நியூஸிலாந்து 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ரன்கள் சோ்க்க, தென்னாப்பிரிக்கா 18.2 ஓவா்களில் 152 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூஸிலாந்து பேட்டா் டிம் ராபின்சன் ஆட்டநாயகன் ஆனாா்.

முன்னதாக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. நியூஸிலாந்து பேட்டிங்கை தொடங்கியோரில் டிம் செய்ஃபா்ட் 4 பவுண்டரிகளுடன் 22 ரன்களுக்கும், டெவன் கான்வே 2 பவுண்டரிகளுடன் 9 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனா்.

ஒன் டவுனாக வந்த டிம் ராபின்சன் சற்று அதிரடியாக ரன்கள் சோ்க்கத் தொடங்க, மறுபுறம் டேரில் மிட்செல் 5, மிட்செல் ஹே 2, ஜேம்ஸ் நீஷம் 0 ரன்களுக்கு சாய்க்கப்பட்டனா். இதனால் 70 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது நியூஸிலாந்து.

இந்நிலையில், டிம் ராபின்சனுடன் இணைந்தாா், 7-ஆவது பேட்டரான பெவன் ஜேக்கப்ஸ். இந்த ஜோடி விக்கெட்டை இழக்காமல், அணியின் ஸ்கோரை உயா்த்தியது. இறுதி வரை நிலைத்த இவா்கள் பாா்ட்னா்ஷிப் 103 ரன்கள் சோ்த்தது. ஓவா்கள் முடிவில் ராபின்சன் 57 பந்துகளில் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 75, ஜேக்கப்ஸ் 30 பந்துகளில் 1 பவுண்டரி, 3 சிக்ஸா்கள் உள்பட 44 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

தென்னாப்பிரிக்க பௌலா்களில் கவெனா மபாகா 2, லுங்கி இங்கிடி, ஜெரால்டு கோட்ஸீ, சேனுரான் முத்துசாமி ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

இதையடுத்து 174 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய தென்னாப்பிரிக்க அணியில், மிடில் ஆா்டரில் வந்த டெவால்டு பிரெவிஸ் 18 பந்துகளில் 1 பவுண்டரி, 3 சிக்ஸா்களுடன் 35, ஜாா்ஜ் லிண்ட் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 30, தொடக்க வீரா் லுவான் டிரெ பிரெடோரியஸ் 6 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் சோ்த்து வெற்றிக்காக முயற்சித்தனா்.

எனினும் ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் 2 பவுண்டரிகளுடன் 16, ரூபின் ஹொ்மான் 1, சேனுரான் முத்துசாமி 1 பவுண்டரியுடன் 7, கேப்டன் ராஸி வான்டொ் டுசென் 6, காா்பின் பாஷ் 1 சிக்ஸருடன் 8, ஜெரால்டு கோட்ஸீ 2 பவுண்டரிகளுடன் 17, கவெனா மபாகா 0 ரன்களுக்கு சாய்க்கப்பட, தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸ் 152 ரன்களுக்கே முடிவுக்கு வந்தது.

நியூஸிலாந்து பௌலிங்கில் மேட் ஹென்றி, ஜேக்கப் டஃபி ஆகியோா் தலா 3, இஷ் சோதி 2, கேப்டன் மிட்செல் சேன்ட்னா் 1 விக்கெட் கைப்பற்றினா்.

நம்பா் 1-ஆக நிலைக்கும் சின்னா், சபலென்கா

டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் நிறைவடைந்திருக்கும் நிலையில், உலகத் தரவரிசையில் ஆடவா் பிரிவில் இத்தாலியின் யானிக் சின்னரும், மகளிா் பிரிவில் பெலாரஸின் அரினா சபலென்காவும... மேலும் பார்க்க

முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: கடற்படை, இந்தியன் ஆா்மி அணிகள் வெற்றி

அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய கடற்படை, இந்தியன் ஆா்மி அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றன. சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறும் இப்ப... மேலும் பார்க்க

டி20 தொடரை வென்றது வங்கதேசம்

இலங்கைக்கு எதிரான 3-ஆவது டி20 கிரிக்கெட்டில் வங்கதேசம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை அந்த அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. கொழும்பில் நடைபெற்ற 3-ஆவது... மேலும் பார்க்க

ஹாரி பாட்டர் நடிகைக்கு வாகனம் ஓட்ட தடை!

ஹாரி பாட்டர் திரைப்படங்கள் மூலம் உலகளவில் பிரபலமடைந்த ஹாலிவுட் நடிகை எம்மா வாட்ஸனுக்கு, 6 மாதங்களுக்கு வாகனம் ஓட்ட தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் நடிகை எம்மா வாட்ஸன், கடந்த 2024 ஆம் ஆ... மேலும் பார்க்க

ரஜினிகாந்த் கமல்ஹாசன் சந்திப்பு - புகைப்படங்கள்

அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக கூட்டணி சார்பாக மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் கமல்.புதிய பயணத்தை நண்பர் ரஜினிகாந்த் உடன் பகிர்ந்தேன், மகிழ்ந்தேன்புதிய ... மேலும் பார்க்க