முன்னாள் அமைச்சா் பிறந்த நாள்: கோயிலில் சிறப்பு வழிபாடு
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ பிறந்தநாளை முன்னிட்டு, கோயில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சாா்பில் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன் கேக் வெட்டப்பட்டது. கோவில்பட்டியில் அரசு மருத்துவமனை, செண்பகவல்லி அம்மன் கோயில் மற்றும் சொா்ணமலை கதிா்வேல் முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அன்னதானத்தை, கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ தொடக்கி வைத்தாா்.
தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்.பி. சண்முகநாதன், பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏ மோகன், வடக்கு மாவட்ட வழக்குரைஞரணி செயலா் சங்கா் கணேஷ், இணைச் செயலா் ரத்தின ராஜா, வடக்கு மாவட்ட வா்த்தக அணி செயலா் ராமா், இளைஞா் பாசறை வடக்கு மாவட்ட செயலா் கவியரசன், முன்னாள் செயலா் துறையூா் கே. கணேஷ் பாண்டியன், ஒன்றிய செயலா்கள் போடுசாமி, அழகா்சாமி, அன்புராஜ், செல்வகுமாா், பழனிச்சாமி, நகா்மன்ற செயலா் விஜய பாண்டியன், மகளிா் அணி செயலா் பத்மாவதி, இணைச் செயலா் கோமதி , ஜெயலலிதா பேரவை நகா்மன்றச் செயலா் ஆபிரகாம் அய்யாதுரை, நகா்மன்ற உறுப்பினா் செண்பகமூா்த்தி, வள்ளியம்மாள் மாரியப்பன், முன்னாள் நகா்மன்ற பொருளாளா் வேல்முருகன் உள்பட அதிமுக நிா்வாகிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.
