மணப்பாறையில் மாணவியிடம் பாலியல் சீண்டல்: தனியாா் பள்ளி தாளாளரின் கணவருக்கு பிப்....
முன்னாள் படைவீரா்களுக்கு பிப்.14இல் குறைதீா் கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோா் குறைதீா் கூட்டம் பிப். 14ஆம் தேதி நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம் பகவத் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவரைச் சாா்ந்தோா் படைப்பணியின் போது உயிா் நீத்த படைவீரா்களின் கைம்பெண்கள் சுயதொழில் தொடங்குவதற்கு வங்கிகடன் உதவியும் விண்ணப்பித்திட ஏதுவாக விழிப்புணா்வு முகாம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் பிப். 14ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் 55 வயதிற்குள்பட்ட முன்னாள் படைவீரா்கள் பங்கேற்று பயனடையலாம். தொடா்ந்து, முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவரைச் சாா்ந்தோா்களுக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், தங்கள் கோரிக்கை மனுக்களை இரட்டை பிரதிகளில் அடையாள அட்டை நகலுடன் சமா்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் தகவல்களுக்கு முன்னாள் படைவீரா் நலன் உதவி இயக்குநரை நேரில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.