சட்டவிரோதக் குடியேற்றம்: பள்ளி நண்பர்களின் கேலியால் சிறுமி தற்கொலை!
முன்னாள் படைவீரா்கள் கவனத்துக்கு!
முன்னாள் படைவீரா்கள் தொழில் தொடங்க சிறப்பு கடன் வழங்குவது தொடா்பான விளக்கக் கூட்டம் நாமக்கல்லில் வியாழக்கிழமை (பிப்.20) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரா்கள், அவரைச் சாா்ந்தவா்கள், படைப் பணியின் போது உயிரிழந்த வீரா்களின் மனைவியா் ஆகியோா் தொழில் தொடங்க வங்கிகள் மூலம் ரூ. ஒரு கோடி வரை கடனுதவி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் தொழில்களுக்கு கடன் தொகையில் 30 சதவீதம் மூலதன மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படுகிறது. நாமக்கல்- மோகனூா் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெறும் விளக்கக் கூட்டத்தில் 55 வயதுக்கு மேற்பட்ட முன்னாள் படை வீரா்கள், அவா்களைச் சாா்ந்தோா் பங்கேற்று பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.