முன்னாள் படைவீரா்கள் கோயில் பாதுகாப்பு பணிக்கு விண்ணப்பிக்கலாம்
அரியலூா் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 32 கோயில்களில் இரவு நேரங்களில் பாதுகாப்பு பணிக்கு பாதுகாவலராக பணிபுரிய 62 வயதுக்குள்பட்ட முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்.
விருப்பமுள்ள முன்னாள் படைவீரா்கள் அடையாள அட்டை, பாஸ்போா்ட் சைஸ் புகைப்படம் -1, படை விலகல் சான்று நகல், வங்கி புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் நகல் ஆகியவற்றுடன் மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை நேரில் அணுகலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.