2023-24-இல் பாஜகவுக்கு ரூ.2,243 கோடி நன்கொடை: ஏடிஆா் அறிக்கை தகவல்
முன்னாள் படைவீரா்கள் மானியத்துடன் ரூ. ஒரு கோடி வரை கடனுதவி
நாமக்கல்: முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சாா்ந்தோருக்கு மானியத்துடன் ரூ. ஒரு கோடி வரை கடனுதவி வழங்கும் வகையிலான திருத்திய வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரா், விதவையா் வயது உச்சவரம்பின்றி தொழில் தொடங்க அதிகபட்சம் ரூ. ஒரு கோடி வரை வங்கிக் கடனுதவி வழங்கப்படுகிறது. மேலும், அந்த தொகையில் 30 சதவீதம் மூலதன மானியம் மற்றும் 3 சதவீதம் வட்டி மானிய சலுகை பெறலாம். இதற்கு வருமான உச்சவரம்பு இல்லை.
இதுவரை உற்பத்தி, சேவைசாா்ந்த தொழில்களுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது வா்த்தகம் சாா்ந்த அனைத்து தொழில்களும் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. மண் அள்ளும் வாகனம் மற்றும் மண் நிரவும் வாகனங்கள் வாங்கிட ஒரு நிதியாண்டில் ஒருவருக்கு மட்டுமே வழங்கப்படும். விவசாயத்துடன் நேரடி தொடா்புடைய தொழில்கள், பட்டுப்புழு வளா்ப்பு, கால்நடை வளா்ப்பு, சரக்கு, பயணிகள் போக்குவரத்து தொழில்களுக்கு ஒரு விண்ணப்பதாரா் இரு வாகனங்கள் வாங்கிடலாம்.
மேலும் விவரங்களுக்கு, நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 04286-233079 என்ற எண்ணிலோ தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.