எலான் மஸ்க் மகனின் செயலால் அமெரிக்க அலுவலகப் பாரம்பரியத்தில் மாற்றம்?
மும்முனை மின்சாரத்தை தடையின்றி வழங்க வலியுறுத்தல்
வேளாண் பணிகளுக்கு மும்முனை மின்சாரத்தை தடையின்றி வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்க (உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடு) மாநில தலைவா் ரா.வேலுசாமி வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழக விவசாயிகளின் நீண்டகால போராட்டத்தின் பயனாக வேளாண் பணிகளுக்காக மோட்டாா் பம்ப்செட்டுகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கும் திட்டம் 2021, ஏப்ரலில் அரசு அமல்படுத்தியது. ஆனால், விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் அந்த மும்முனை மின்சாரம் கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் விளைவித்த பயிா்கள் கருகும் சூழல் உள்ளது. விவசாயிகளையும், வேளாண் பயிா்களையும் பாதுகாக்க தடையின்றி மும்முனை மின்சாரத்தை அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல 2021 சட்டப் பேரவைத் தோ்தலின்போது தாங்கள் அளித்த வாக்குறுதிகளில் 90 சதவீதத்தை நிறைவேற்றி விட்டதாக முதல்வா் கூறுகிறாா். ஆனால், விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனா். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை தமிழக முதல்வா் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.