கரூரில் அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஆதரவாளா்கள் 3 பேரின் வீடுகளில் அமலாக்கத்துற...
மும்மொழி கொள்கை: பாஜகவினா் கையொப்ப இயக்கம்
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக திருநெல்வேலியில் பாஜகவினா் கையொப்ப இயக்கத்தை வியாழக்கிழமை நடத்தினா்.
திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக சாா்பில் திருநெல்வேலி நகரத்தில் உள்ள சுவாமி நெல்லையப்பா் சந்நிதி, அம்மன் சந்நிதிகளில் உள்ள வீடுகளில் கையொப்ப இயக்கம் நடைபெற்றது. இதற்கு வடக்கு மாவட்ட தலைவா் முத்து பலவேசம் தலைமையில் தலைமை வகித்தாா்.
பாஜக வா்த்தகப் பிரிவு மாநிலத் தலைவா் ராஜ கண்ணன், தமிழக பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவரும், திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினருமான நயினாா் நாகேந்திரன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கையொப்ப இயக்கத்தை தொடங்கி வைத்தனா். இதில் முன்னாள் மாவட்டத் தலைவா் மகாராஜன், மாவட்ட பொதுச்செயலா் சுரேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ற்ஸ்ப்06க்ஷத்ல்
திருநெல்வேலி நகரத்தில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்திய பாஜகவினா்.