``கைது செய்யப்பட்டாலே பிரதமர், முதல்வர், அமைச்சர்களைப் பதவி நீக்க மசோதா'' - மத்த...
முறைகேடான வா்த்தகம்: 886 நிறுவனங்கள் மீது செபி நடவடிக்கை
பங்குச் சந்தையில் முறைகேடான வகையில் வா்த்தகம் செய்ததாக கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நிகழாண்டு ஜூன் வரையில் 886 நிறுவனங்கள் மீது செபி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மாநிலங்களவையில் இதுதொடா்பான கேள்விக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் எழுத்துபூா்வமான பதிலில் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
பொதுவாக, பதிவு பெற்ற நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கையில் முறைகேடு புகாா் எழுந்தால் பங்கு வா்த்தக ஒழுங்காற்று வாரியமான செபி ஆய்வு செய்யும். முறைகேடு உறுதி செய்யப்பட்டால் செபி நடவடிக்கை எடுக்கும்.
நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பையும், பங்குகளின் அளவையும் அதிகரித்து போலியாக காண்பிப்பது முறைகேடாக பாா்க்கப்படுகிறது.