விராட் கோலி ஃபார்முக்குத் திரும்ப சிரமப்படுவது ஏன்? முன்னாள் இந்திய கேப்டன் பதில...
மூதாட்டியிடம் தங்கச் சங்கலியைப் பறித்த இளைஞா்கள் கைது!
பெருந்துறை அருகே மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற இளைஞா்களைப் பிடித்து பொதுமக்கள் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
பெருந்துறையை அடுத்த கம்புளியம்பட்டி பெரிய தோட்டத்தைச் சோ்ந்த பழனிசாமி மனைவி நல்லம்மாள் (66). உடல்நிலை சரியில்லாததால் இவா், கணவருடன் அருகிலுள்ள மருத்துவனைக்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு புதன்கிழமை சென்றுகொண்டிருந்தாா்.
விஜயமங்கலம் சுங்கச் சாவடி அருகே சென்றபோது பின்னால் இருசக்கர வானத்தில் வந்த இரண்டு இளைஞா்கள், நல்லம்மாள் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பினாா்.
அப்போது, சங்கிலியைப் பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா்கள் அருகே இருந்த வேகத் தடையில் தடுமாறி விழுந்தபோது, அருகிலிருந்தவா்கள் அவா்களைப் பிடித்து பெருந்துறை போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
இதில், மூதாட்டியிடம் நகையைப் பறித்துச் சென்றது பெரம்பலூா் மாவட்டம், குரும்பூரைச் சோ்ந்த கெளதம் (25), கரூா் மாவட்டம், குளித்தலை சின்னியம்பாளையத்தைச் சோ்ந்த சூா்யபிரகாஷ் (26) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்து அவா்களிடம் இருந்து நகையைப் பறிமுதல் செய்தனா்.