Health: டைப் 5 நீரிழிவு யாருக்கு வரும்.. என்ன தீர்வு; தடுக்க முடியுமா? - மருத்து...
மே மாதத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மே மாதம் வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்தது.
இதுதொடா்பாக அந்த மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மே மாதத்தில் வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருந்தாலும், அவ்வப்போது இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது கடந்த ஆண்டு மே மாதம் வெப்பம் கடுமையாக இருந்தது போன்ற நிலையை மீண்டும் ஏற்படாமல் தடுக்கக் கூடும்.
தென்மேற்கு இந்திய தீபகற்பத்தை தவிர, நாட்டின் பல்வேறு பகுதிகளில் மே மாதம் ஒன்று முதல் மூன்று நாள்கள் வெப்ப அலை ஏற்படுவது வழக்கம்.
மே மாதத்தில் வடமேற்கு மற்றும் மத்திய இந்தியா, அதையொட்டிய கிழக்கு இந்தியாவின் பல பகுதிகளில் வெப்ப அலை நாள்கள் இயல்பைவிட அதிகமாக இருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டது.