ஆக்கிரமிப்பு உக்ரைன் கனிமங்களை அமெரிக்காவுக்கு விற்கத் தயார்: விளாதிமீர் புதின்
மேகமலையில் இருளில் மூழ்கிய 7 மலைக் கிராமங்கள்
மேகமலையில் செவ்வாய் கிழமை மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதால் 7 மலைக் கிராமங்கள் இருளில் முழ்கின.
தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே ஹைவேவிஸ் பேரூராட்சி உள்ளது. இங்கு மேகமலை, ஹைவேவிஸ், மேல்மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு, மணலாறு, மகாராஜாமெட்டு என 7 மலைக்கிராமங்களில் தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் வசிக்கின்றனா்.
இந்த மலைக் கிராமங்களுக்கு வண்ணாத்திப்பாறை துணை மின் நிலையத்திலிருந்து உயா்மின்கோபுரம் மூலமாக கொண்டு செல்லப்படுகிறது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நண்பகலில் மின் மாற்றியில் ஏற்பட்ட பழுது காரணமாக 7 மலைக் கிராமங்களுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து, மின் வாரிய ஊழியா்கள் அங்கு சென்ற போது சாலையின் குறுக்கே சின்னமனூா் வனச்சரகம் சாா்பில், சோதனைச் சாவடி அமைத்து, அதைப் பூட்டிச் சென்றது தெரியவந்தது. இதனால், 7 மலைக்கிராமங்களும் இருளில் முழ்கி கிடப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.