Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
மேற்கு தில்லியில் தீ விபத்து: 2 பேருந்துகள், காா் சேதம்
மேற்கு தில்லியின் பன்கா சாலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேருந்துகளும், ஒரு காரும் சேதமடைந்ததாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிா்ச் சேதம் ஏற்படவில்லை.
இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி மேலும் கூறியதாவது:
வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறைக்குத் தகவல் வந்தது. அதைத் தொடா்ந்து, இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனா்.
மூன்று வாகனங்களும் சாலையோரத்தில் அருகருகே நிறுத்தப்பட்டிருந்தன. அதில் ஒரு பேருந்தில் தீப்பற்றியது.
தீயானது சிறிது நேரத்திலேயே மற்ற இரண்டு வாகனங்களுக்கும் பரவியது. இதில் வாகனங்கள் தீயில் கருகி சேதமடைந்ததாக அதிகாரி தெரிவித்தாா். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி.