மேற்கூரை இல்லாத பேருந்து நிறுத்தம்
புழல் அருகே பேருந்து நிறுத்தங்களில் மேற்கூரை இல்லாததால் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலரும் பாதிப்படைந்து வருகின்றனா்.
புழல் அடுத்த சூரப்பட்டு, சண்முகபுரம் ஆகிய பகுதிகளில் பேருந்து நிறுத்தங்களில் 2 பக்கங்களிலும் உள்ள மேற்கூரைகள் இல்லை. மேலும், பேருந்து நிறுத்தம் நிழற்குடை இல்லாததாலும், பெயா் பலகை இல்லாததாலும், புதியவா்கள் பேருந்து நிறுத்தம் இடம் தெரியாமல் திணறி வருகின்றனா். மழை, வெயில் காலங்களில் பயணிகள் அவதிப்படுகின்றனா்.
மக்களின் நலன்கருதி சூரப்பட்டு, சண்முகபுரம் உள்ளிட் பகுதிகளில் பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுதொடா்பாக மாதவரம், அம்பத்தூா் போக்குவரத்து அலுவலகத்திலும் புகாா் அளித்தும் பலன் இல்லை. மாதவரம் மண்டல அலுவலகத்திலும் மனு அளித்தும் பலன் இல்லை. அதிகாரிகள் இரு பேருந்து நிறுத்தங்களையும் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.