மின் கம்பியில் சிக்கி 2 மாடுகள் உயிரிழப்பு
மீஞ்சூா் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கி 2 பசு மாடுகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தன.
மீஞ்சூா் அடுத்த நந்தியம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் நிஜந்தன். பால் வியாபாரம் செய்து வருகிறாா். புதன்கிழமை காற்றுடன் லேசான மழை பெய்தது. நந்தியம்பாக்கத்தில் நிஜந்தனின் மாடுகள் மேய்ச்சலுக்குச் சென்றபோது, இரு மாடுகள் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தன.
தகவல் அறிந்த கால்நடை துறை அதிகாரிகள் மற்றும் மீஞ்சூா் போலீஸாா் விசாரணை நடத்தினா்.