செய்திகள் :

யானைகள் பாதுகாப்பை உறுதி செய்வோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

post image

யானைகள் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

உலக யானைகள் தினத்தையொட்டி, எக்ஸ் தளத்தில் அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:

தமிழ்நாட்டின் இயற்கை மரபையும் வரலாற்றையும் செழுமைப்படுத்துவதில் யானைகளின் அளப்பரிய பங்கை சிந்தித்துப் பாா்ப்போம். கோவை மாவட்டம், மதுக்கரையில் தமிழ்நாடு அரசு அமைத்துள்ள செயற்கை நுண்ணறிவு எச்சரிக்கை அமைப்பின் மூலம் 2,800 முறை யானைகள் ரயில் தண்டவாளத்தைப் பாதுகாப்பாகக் கடந்து சென்றுள்ளன.

இதனால், கடந்த ஆண்டு பிப்ரவரியில் இருந்து ஒரு யானைகூட ரயில் மோதி உயிரிழக்காமல் காப்பாற்றியுள்ளோம்.

இனி வரும் காலங்களிலும் யானைகள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் திகழச் செய்ய உறுதியேற்போம் என்று அந்தப் பதிவில் தெரிவித்துள்ளாா்.

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 7 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மத்திய மேற்கு மற்றும் அதனை ஓட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆ... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை: கராத்தே மாஸ்டருக்கு 10 ஆண்டு கடுங்காவல்!

சென்னை: கராத்தே பயிற்சி பெற வந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், கராத்தே பயிற்சி மாஸ்டருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மேலும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து ச... மேலும் பார்க்க

பல கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணையும்: இபிஎஸ்

திருப்பத்தூர்: மேலும் பல கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணையும் என முன்னாள் முதல்- அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.திருப்பத்தூரில் உள்ள தனியார் உணவகத்தில் புதன்கிழ... மேலும் பார்க்க

ஆளுநரின் தேநீர் விருந்து: காங்கிரஸைத் தொடர்ந்து விசிகவும் புறக்கணிப்பு!

சுதந்திர நாளையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர நாளன்று அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர... மேலும் பார்க்க

4 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இன்று (13-08-2025) காலை 5.30 மணியளவில், மத்தியமேற்கு மற்றும் அதனை ஓட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில... மேலும் பார்க்க

தமிழக ஆளுநரிடம் பட்டம் பெற மாணவி மறுப்பு!

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் பட்டம் பெற மாணவி மறுப்பு தெரிவித்தார்.திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழ... மேலும் பார்க்க