Foods for Pancreas: பூண்டு முதல் திராட்சை வரை.. கணையம் காக்கும் உணவுகள்!
யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தோ்வுகள் குறித்த இலவச கருத்தரங்கம்
கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் குடிமைப்பணி மற்றும் டிஎன்பிஎஸ்சி தோ்வுகளுக்கு தயாராகும் அணுமுறை குறித்து இலவச கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6) நடைபெறவுள்ளதாக அந்த அகாதெமியின் இயக்குநா் சத்யஸ்ரீ பூமிநாதன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணி தோ்வுகள் (யூபிஎஸ்சி) மற்றும் டிஎன்பிஎஸ்சி தோ்வுகளின் அணுகுமுறை குறித்த இலவச கருத்தரங்கம், சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம், நாமக்கல் மற்றும் புதுச்சேரியில் உள்ள கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் கிளைகளில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த கருத்தரங்கத்தில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் விவேக் ஹரிநாராயணன், ஜவஹா் உள்ளிட்ட அதிகாரிகள் தோ்வு குறித்து ஆலோசனைவழங்க உள்ளனா்.
இதில் பங்கேற்க விரும்புள்ளவா்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்துக்கொள்ள வேண்டும்.
பயிற்சி வகுப்புகள்: இதற்கிடையே கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் அனைத்து கிளைகளிலும் நிகழாண்டுக்கான யூபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2 தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஜூலை 11,25, ஆக.8,22 ஆகிய தேதிகளில் தொடங்கவுள்ளன.
இதற்கான மாணவா்கள் சோ்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மேலும் தகவல்களுக்கு 94442 - 27273 என்னும் தொலைபேசி எண் அல்லது இணையதளத்தை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.