யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு: விண்ணப்பிக்க பிப். 21 வரை அவகாசம்!
யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 21ஆம் தேதி மாலை 6 மணி வரை அவகாசம் அளித்து மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் உத்தரவிட்டுள்ளது.
முன்பு பிப். 11ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு பின்னர் பிப். 18 (இன்று) வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. தற்போது இரண்டாவது முறையாக அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிப். 22 முதல் பிப். 28 வரை விண்ணப்பதாரர்கள் திருத்தம் மேற்கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
979 பணியிடங்களுக்கு மே 25 ஆம் தேதி யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 1,056 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு 979ஆக குறைக்கப்பட்டுள்ளது.
தேர்வு தொடர்பான அறிவிப்பு upsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆக.22ஆம் தேதி முதல் 5 நாட்கள் முதன்மைத் தேர்வுகள் நடத்தப்படும் என யுபிஎஸ்சி தகவல் தெரிவித்துள்ளது.